சர்கார் கதை திருடியதை ஒப்புக்கொண்ட முருகதாஸ் – அதிரடி திருப்பம் !

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “சர்கார்” படம் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகா காத்திருக்கிறது.

இந்நிலையில் முருகதாஸ் மீது வருண் ராஜேந்திரன் என்பவர் தனது “செங்கோல்” என்ற கதையை திருடி இவர் சர்கார் என்ற படத்தை இயக்கியுள்ளார் என்று புகார் கூறியிருந்தார்.

நீதிமன்றத்தில் வருண் அளித்த புகாரில் “செங்கோல் என்ற தலைப்பில் நான் எழுதிய கதையைத் திருடி சர்கார் என்ற தலைப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படமாக்கியுள்ளார். இந்தக் கதையை ஏற்கெனவே நான் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் முறைப்படி பதிவு செய்துள்ளேன். எனவே இந்தப் படத்தின் கரு மற்றும் கதை என்னுடையது என்பதால் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையை நேரில் பார்ப்பதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பாக்யராஜ் நேரில் வந்திருந்தனர். இந்த வழக்கில் சன் பிக்சர்ஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், செங்கோல் கதையின் கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமரசம் செய்துகொண்டார்கள்.

மேலும் சர்கார் படத்தின் கதை வருண் ராஜேந்திரனுடையது என்று ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், டைட்டில் கார்டில் வருண் ராஜேந்திரனின் பெயர் போடப்படும் என்றும் சன் பிக்சர்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்கார் படத்தின் ரிலீஸுக்கு எந்த தடையும் இல்லை என்று உறுதியாகியுள்ளது