இத்தனை நாடுகளில்.. இத்தனை திரையரங்குகளில் சர்கார் ரிலேயே ஆகிறதா? அடேங்கப்பா !

முருகதாஸ் இயக்கத்தில் விஜய்,வரலட்சுமி,ராதா ரவி,பழ.கருப்பையா நடித்துள்ள “சர்கார்” படம் உலகம் முழுவதும் நவம்பர் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

சர்கார் கதை திருட்டு வழக்கு ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில் படம் தடை இன்றி ரிலீஸ் ஆகா காத்திருக்கிறது. சனி கிழமை அன்று இப்படத்தின் புக்கிங் பல இடங்களில் தொடங்கவுள்ளது.

6ம்தேதி ரிலிசாகும் இப்படம் உலகம் முழுவதும் 80 நாடுகளில் ரிலிசாகவுள்ளதாம். தமிழ் படம் இத்தனை நாடுகளில் ரிலிசாவது இதுதான் முதன்முறையாம்.

மேலும் மொத்தம் 3000 திரையரங்குகளில் ரிலிசாகவுள்ளது. ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர்.