சர்கார் வசூலை அதிகரிக்க தியேட்டர்கள் செய்யும் அட்டூழியம் – விசாரணை குழு அமைப்பு!

விஜய் நடித்துள்ள சர்கார் படம் நவம்பர் 6 தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. மதுரையில் ஐந்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

இப்படத்துக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. ஆன்லைனில் ஒரு டிக்கெட் ரூ. 500 முதல் ரூ.1000 வரை விற்கப்படுகிறது.

சட்டப்படி மல்டி பிளக்ஸ் திரையரங்கில் ரூ.50 முதல் ரூ. 150 வரையும், மற்ற திரையரங்குகளில் ரூ.40 முதல் நூறு ரூபாய் வரையும், ஏசி திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.80 வரையும் கட்டணம் வசூலிக்கலாம்.

இந்த விதியை மீறி பலமடங்கு அதிகமாக வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க கூறி மதுரை உச்சநீதிமன்றத்தில் மகேந்திரபாண்டி என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.

இதனை உடனே எடுத்துக்கொண்ட நீதிமன்றம் மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், காலை 7 முதல் 8 மணி வரை படக்காட்சிகள் வெளியிடப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.