என் கதையை திருடி “சர்கார்” படத்தை எடுத்துள்ளார் – முருகதாஸ் மீது உதவி இயக்குனர் குற்றசாட்டு !

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தின் டீசர் வரும் ஆயுத பூஜை அன்று வெளியாகும் என எதிர்பார்ப்படுகிறது.

இந்நிலையில் “சர்கார்” படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் ஒருவர் புகார் அளித்துள்ளார். உதவி இயக்குநர் வருண் என்பவர் ‘செங்கோல்’ என்று பெயரில் ஒரு கதை எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்தாராம்.

அந்த கதையை திருடித்தான் இந்த சர்கார் படம் உருவாகிறது என்று புகார் கூறியுள்ளார். அது பற்றி எழுத்தாளர் சங்கம் விசாரனை நடத்தி வருகிறதாம்.

இதற்கு முன் விஜய்-முருகதாஸின் கத்தி படமும் இதே போன்ற ஒரு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் முருகதாஸ் இயக்கிய கடைசி படமான “ஸ்பைடர்” படமும் பிரபல ஹாலிவுட் படத்தின் காப்பி என்ற சர்ச்சையில் சிக்கினார்.

தொடர்ந்து இவர் மீது இந்த கதை திருட்டு குற்றச்சாட்டு வருவது அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Loading...

Related posts