சீதக்காதி படத்தின் கிளைமாக்ஸ் சீன் வெளியானது – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட இயக்குநரான பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ‘சீதக்காதி’ என்ற படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் 25வது படமான இதில், அவர் வயதான நாடக மற்றும் சினிமா நடிகராக நடித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் 20ஆம் தேதி ரிலீஸ் தயாராகவுள்ளது. விஜய் சேதுபதியுடன் ரம்யா நம்பீசன்,இயக்குனர் மகேந்திரன், காயத்ரி, அர்ச்சனா உள்ளிட்டர் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில், இப்படத்தின் கிளைமேக்ஸ் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தற்கொலை செய்துகொள்வதாக கிளைமேக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பெரிய ஹீரோக்கள் படங்களில் ஆன்டி கிளைமாக்ஸ் (Anti Climax) இடம்பெறாது. அது அவர்களின் ரசிகர்களுக்குப் பிடிக்காது. ஆனால், விஜய் சேதுபதி துணிந்து இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யமடைய வைத்துள்ளது.

Loading...