சீதக்காதி ரிலீஸ் தேதியை அறிவித்த விஜய் சேதுபதி – ரசிகர்கள் குஷி!

விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் வெளியான “96” படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. செம ஹிட் படத்தை கொடுத்த கையேடு தனது அடுத்த படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிட்டார் விஜய் சேதுபதி.

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி,அர்ச்சனா, ரம்யா நம்பீசன்,காயத்திரி, பார்வதி நாயர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “சீதக்காதி”. இது விஜய் சேதுபதியின் 25வது படமாகும்.

வயதான நாடக கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று இப்படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியுடன் வெளியானது. இப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வித்யாசமான கதாபத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் இவருக்கும் நாளும் நாள் ரசிகர்கள் அதிகமாகி வருகிறார்கள். மேலும் சீதக்காதி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Loading...