சீதக்காதி படத்தை வாங்கிய பிரபல நிறுவனம் – வெற்றி பெரும் என்று நம்பிக்கை!

விஜய் சேதுபதி படங்களை என்றால் நம்பி போகலாம் என்ற நம்பிக்கை தற்போது உருவாகியுள்ளது. இவர் தயாரிப்பில் உருவான “மேற்கு தொடர்ச்சி மலை” படமும் பிரம்மனாட வரவேற்பை பெற்றது.

நடிப்பிலும் தொடர்ந்து வித்யாசத்தை காட்டிவரும் விஜய் சேதுபதி “சூப்பர் டீலஸ்” படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதை தொடந்து “சீதக்காதி” படத்தில் வயதான நாடக கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்த வகையில் அண்மையில் அவரின் சீதக்காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அனைவரையும் மிகவும் கவர்ந்துவிட்டது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் விஜய் சேதுபதிக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் என்பது இப்போது நினைவிற்கு வருகிறது. சீதக்காதியில் விஜய் சேதுபதி வயதான தோற்றத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தை தமிழ்நாட்டு உரிமத்தை விக்ரம் வேதா படத்தை வாங்கிய டிரைய்டெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.இந்த நிறுவனம் முன்வந்து வாங்கியுள்ளதால் இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

இப்படம் உலகம முழுவதும் நவம்பர் 16 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துளளது

Loading...