விஜய் ரசிகர்களை நினைத்தால் தான் கொஞ்சம் கவலையா இருக்கு.. -சாந்தனு வருத்தம்

விஜய் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படம் கடந்த சில நாட்களாக கடும் பிரச்சனைகளை சந்தித்து வந்தது. வருண் என்ற இயக்குனர் சர்கார் படத்தின் கதை என்னுடையது தான் என முதலில் எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்து பிறகு நீதிமன்றம் வரை சென்றிருந்தார்.

ஆனால் நேற்று நடந்த இருதரப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இது சம்மந்தமாக சமீபத்தில் பேட்டி அளித்துள்ள எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பாக்யராஜின் மகனான சாந்தனு மிகவும் கவலையுடன் பேசியுள்ளார்.

அதில், ஏ.ஆர்.முருகதாஸ் தனது தந்தையின் படங்களை பற்றி அவதூறாக கூறியது மன வருத்தத்தை அளிக்கிறது. ஆனால் அப்பா கடைசி வரையில் சர்கார் திருட்டு கதை என எந்தவொரு பேட்டியிலும் கூறவில்லை.

ஆனால் விஜய் ரசிகர்கள் என்னையும் எனது அப்பாவையும் சமூக வலைத்தளங்களில் திட்டி பதிவிட்டனர். அவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அவர்களை நினைத்தால் தான் பயமாக இருக்கு என்றார்.