அடடே.. விஷால் படத்தில் சன்னி லியோன் !

சன்னி லியோன் சில பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து அவருடன் நடிக்க பல முன்னணி ஹீரோக்களும் தவிர்த்து வருவதாக செய்திகள் வந்தது. இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் குறைத்துள்ளது.

அதுமட்டும் இல்லாமல் சன்னி லியோன் நடிக்கும் எந்த படமாக இருந்தாலும் சர்ச்சை கிளம்பியது.மேலும் கர்நாடகாவில் சன்னிலியோன் பங்கேற்க இருந்த நடன நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அரசு தடைவிதித்தது.

இத்தனை எதிர்ப்புகளையும் கடந்து தற்போது தமிழ்,கன்னடம், ஹிந்தி மொழிகளில் உருவாகும் “வீரமாதேவி” என்ற சரித்திர படத்தில் நடித்துவருகிறார்.

இதற்கிடையே விஷால் “அயோக்கியா” படத்தில் ஒரு பாடலுக்கு நடமாட சன்னி லியோன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.அந்த படத்தில் ஒரு பாடலுக்கு அவர் கவர்ச்சி நடனம் ஆட இருப்பதாக கூறப்படுகிறது. வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கிறார்.

Loading...