பெரிய எதிர்பார்ப்பில் இருந்த ‘சூப்பர் டீலக்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் இதோ – செம வரவேற்பு!

‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா, அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் என்ற பெயர் கிடைத்தது.

சில வருட இடைவெளிக்குப் பின் இயக்கியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார். ஷில்பா என்ற திருநங்கை வேடத்திலும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

ஃபஹத் ஃபாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம், பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஆகிய மூவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

தியாகராஜன் குமாரசாமி, மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் கே.சேகர் ஆகிய நான்கு பேரும் இணைந்து இந்தப் படத்துக்குத் திரைக்கதை எழுதியுள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவரின் புகைப்படங்களும் இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ளன.

படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...