கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 லட்சம் நிவாரணம் வழங்கிய சூர்யா குடும்பம்!

கஜா புயலானது, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களை அடியோடு சாய்த்து புரட்டி போட்டு சென்றுவிட்டது.

இதனால் அந்த மாவட்டங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கையை தொலைத்துள்ளார்கள். வீடு, வாசல், தோட்டம், நிலபுலன்கள், உள்ளிட்டவற்றை இழந்து, சாப்பாடு, தண்ணி, கரண்ட் இல்லாமல் இன்னமும் அவஸ்தை பட்டு வருகிறார்கள்.

கஜா புயல் காரணமாக 45 பேர் உயிரிழந்துள்ளார்கள். டெல்டா விவசாயிகள் பயிரிட்ட அனைத்தும் புயலால் முழுமையாக அழிந்துவிட்டது.

நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பம் இணைந்து பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு 50 லட்சம் ருபாய் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்கள்.

சென்னை,கேரளாவில் தாக்கிய புயலின் பொது அணைத்து நடிகர் நடிகைகளும் ஓடி ஓடி பொய் பல லட்ச ரூபாய் உதவினார்கள். ஆனால் அதுவே நம் சொந்த மக்களுக்கு பல நடிகர்கள் வாயை திறக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்று சமூக வலைத்தளத்தில் இளைஞர்கள் புலம்பி வருகிறார்கள்.

Loading...