கே.வி.ஆனந்த் படத்தில் சூர்யா,மோகன்லால் கதாபத்திரம் இதுதான் – கசிந்த தகவல்!

சூர்யா, கே.வி.ஆனந்த் மீண்டும் ஒரு படத்திற்காக இணைந்துள்ளார்கள்.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஆர்யா, மோகன்லால், சாயெஷா நடிக்கிறார்கள்.

ஜில்லா படத்திற்கு பிறகு மோகன்லால் தமிழில் மீண்டும் நடிப்பதால் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் மோகன்லால் பிரதமர் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா அவரின் பாதுகாப்பு அதிகாரியாக வருகிறாராம்.

இந்த நிலையில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மோகன்லால் பிரதமராக நடிக்கிறார் என்றால், இந்திய அரசியல் தொடர்பான படமாக இருக்குமோ எனக் கேள்வி எழுகிறது.