வெறுப்பை சம்பாதிக்கும் மீம்ஸ் கலாச்சாரம் – சூர்யா வருத்தம்!

கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு சூர்யா மற்றும் அவரது குடும்பம் சேர்ந்து ரூ 50 லட்சத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொடுத்து உதவியுள்ளார்.

இந்நிலையில் இன்று இவர் எழுதிய கட்டுரை ஒன்றில், இன்று தமிழகம் முழுவதும் மீம்ஸ் கலாச்சாரம் தலைத்தூக்கியுள்ளது. இது எந்த அளவிற்கு கொடூரமாக செல்கின்றது என்றால், ஒருத்தர் இழப்பை கூட சந்தோஷமாக கலாய்த்து மீம்ஸ் போடும் அளவிற்கு வளர்ந்துள்ளது என்று கூறி சூர்யா வருத்தப்பட்டுள்ளார்.

குறிப்பாக இந்த மீம்ஸ் பார்த்து தான் இதனை கூறியுள்ளார்,

“புயலுக்கு கஜான்னு ஆம்பளைப் பேரு வெச்சா இப்படித்தான். குடிகாரன் மாதிரி இங்கே வர்றேன்னு சொல்லிட்டு வேற எங்கேயோ போறது. இதே சுஜான்னு பொம்பளப் பேரு வெச்சிருந்தா ஸ்ட்ரெயிட்டா இந்நேரம் எல்லாருக்கும் சங்கு ஊதி சோலியை முடிச்சிருக்கும். – இப்படி ஒரு வாட்ஸ்அப் பதிவு பலரிடமிருந்து நமக்கு வந்திருக்கும். நாமும் பலருக்கும் அதைப் பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்திருப்போம்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

Loading...