இந்த பெண்ணால் என் கற்பு பறிபோனது – இயக்குனர் சுசி கணேசன் அதிர்ச்சி புகார் !

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தும் வகையில் ‘மீ டூ’ என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் பயன்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் சினிமா துறையில் இருப்பவர்கள் அதிகம் இந்த புகார்களை கூறிவருகிறார்கள். கோலிவுட்டில் சின்மயி, வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்தது அதிகம் பேசப்படுகிறது.

இந்நிலையில் பெண் கவிஞரும், இயக்குனரும், நடிகையுமான லீனா மணிமேகலை தான் 2005ல் தொகுப்பாளினியாக இருந்தபோது தன்னிடம் காரில் இயக்குனர் சுசிகணேசன் தவறாக நடக்க முயன்றார் என்றும் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டிதான் தப்பித்ததாகவும் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக சுசிகணேசன் நீண்ட பதிவை இட்டுள்ளார். அதில், கையில் கத்தி வைத்திருந்த நீங்கள் அப்போதே நெஞ்சில் இறக்காமல் ஏன் இருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நீங்கள் சொன்ன பொய்யால் என் கற்பு பறிபோய்விட்டது. ஆணுக்கும் கற்பு இருக்கிறது. இதற்கு மன்னிப்பு கோராவிட்டால் நான் மானநஷ்ட ஈடு வழக்கு போடுவேன். என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.