அசுரன் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகும் பிரபல வெற்றி பட இயக்குனர்?

வட சென்னை வெற்றிக்கு பிறகு அசுரன் என்ற படத்திற்க்கு தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடித்து வருகிறார். கடந்த மாதம் முதல் படப்பிடிப்பும் ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் இந்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. காதல், வழக்கு எண். 18/9 உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. அசுரன் படத்தின் மூலமாக அவர் நடிகராக களமிறங்கவுள்ளார். Please follow and like us: Loading…

Read More

தனுஷின் அசுரன் படத்தின் நடிக்கும் பிரபல நடிகரின் மகன்!

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் கடைசியாக வெளியான “வட சென்னை” படம் செம ஹிட் அடித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகவுள்ளது. அதற்கு முன்பு இதே கூட்டணி “அசுரன்” என்ற படத்திற்காக இணைந்துள்ளார்கள். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அசுரன் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியாரும் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி பகுதியில் துரிதமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் வந்த போஸ்டர் கூட மிரட்டலாக இருந்தது. இப்படத்தின் தற்போது நடிகர் கருணாஸின் மகன் கென் இணைந்துள்ளாராம். இவர் ஏற்கனவே அழகு குட்டி செல்லம், நெடுஞ்சாலை படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. Please follow and like us: Loading…

Read More

தனுஷ் ரசிகர்களுக்கு இன்று அசுரனனின் ஸ்பெஷல் விருந்து – என்ன தெரியுமா?

வட சென்னை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு முன்பு தனுஷ், வெற்றிமாறன் இணைந்து அசுரன் என்ற படத்தை உருவாக்கவுள்ளார்கள். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கவுள்ளார். வி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதில் தனுஷ் புதிய கெட்-அப்பில் தோன்றியிருந்தார். நாளை இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இன்று 6 மணிக்கு புதிய போஸ்ட்டர் ஒன்று வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். Please follow and like us: Loading…

Read More