“தேவர் மகன் 2” படத்தை எதிர்பாக்கும் ரசிகர்கள் – கமல் ஹாசன் கொடுத்த சர்ப்ரைஸ்!

சிவாஜி கணேசன், கமல் ஹாசன் நடிப்பில் வந்த “தேவர் மகன்” படம் மெகா ஹிட் அடித்த படம். குறிப்பாக தென் தமிழகத்தில் இப்படம் 500 நாட்களுக்கு மேல் ஓடியது சாதனை படைத்தது. “இந்தியன்” படம் போல இப்படத்தின் இரண்டாம் பாகமும் வரவேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அதை பூர்த்தி செய்யும் விதமாக “தேவர் மகன் 2” வரும் என கமல் ஹாசன் அறிவித்தார். ஆனால் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதால் அந்த முயற்சியை கைவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்துவரும் கமல் ஹாசன் தேவர் மகன் படம் எடுக்கப்பட்ட பொள்ளாச்சி அரண்மனைக்கு நேரில் சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. Please follow and like us: Loading…

Read More

இந்தியன் 2 படத்தில் இணைந்த முன்னணி நடிகர் -அதிகாரபூர்வ தகவல்!

கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியாகி வசூல் குவித்த படம் இந்தியன். தற்போது இதன் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் தயாராகிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார். மீண்டும் இப்படத்திற்காக இயக்குனர் ஷங்கர், கமல் ஹாசன் இணைத்துள்ளார்கள். சமீபத்தில் இதன் போஸ்டர்கள் வெளியாகி செம வரவேற்பை பெற்றது. மேலும் கடந்த 18ஆம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். நெடுமுடி வேணு, சித்தார்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அக்ஷய் குமார் அல்லது அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரபல குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தகவலை தனது முகநூலில் டெல்லி கணேஷ் அவர்களே கூறியுள்ளார். கமல் நடித்த நாயகன், அவ்வை சண்முகி, புன்னகை மன்னன்…

Read More