அட்லீ படத்தில் கிறிஸ்ட்டின் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் – பெயர் கூட இதுதான்!

‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதன் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் பெரிய பட்ஜெட் படமாக உருவாகிறது. நயன்தாரா, கதிர், யோகி பாபு, விவேக் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்துக்கு மைக்கேல் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விளையாட்டுப் பயிற்சியாளராக நடிக்கும் விஜய், சரியான உடற்கட்டு பெற கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. Please follow and like us: Loading…

Read More

அட்லீ படத்திற்காக விஜய்யின் கெட் அப் மாற்றம் – வைரலாகும் புகைப்படம்!

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். விஜய்யின் 63வது படமாக உருவாகிவரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு, விவேக் ஆகியோரும், வில்லன் கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி ஆகியோரும் நடிக்கின்றனர். விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நடிகர் கதிர் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும், படத்தின் சில பகுதிகள் அமெரிக்காவில் எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இப்படத்தில் விஜய் தன் புருவத்தில் ஒரு கோடு போட்டுள்ளார், இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. Please follow and like us: Loading…

Read More

அட்லீ இயக்கும் தளபதி 63வது படம் குறித்து வெளியான செம அப்டேட்!

சர்கார் படத்திற்கு பிறகு தளபதி விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டுவருகிறார்கள். விளையாட்டை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாகவுளள்து. இதில் விஜய் பெண்கள் அணி பயிற்சியாளராக நடிக்கிறார். இப்போது புதிய அப்டேட் என்னவென்றால் வரும் 21ம் தேதி படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அதுவும் சென்னையில் உள்ள பின்னி மில்லில் ஒரு செட்டில் தொடங்குகிறதாம். அந்த செட் வட சென்னை போல் உருவாக்கியுள்ளார்களாம். 20ம் தேதி செட்டிற்காக ஒரு ஸ்பெஷல் பூஜையும் நடக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. Please follow and like us: Loading…

Read More