விறுவிறுப்பான “காப்பான்” – சூர்யா படம் பற்றி வெளியான தகவல்!

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் காப்பான். மோகன் லால், ஆர்யா, சயிஷா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். மும்மரமாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிப்பு வெளிநாடுகளில் நடந்து வருகிறது, இதில் மோகன் லால் இந்திய பிரதமராக நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் பணியாற்றி வரும் எடிட்டர் ஆண்டனி, காப்பான் படம் விறுவிறுப்பான, த்ரில்லர், பல திருப்பங்கள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இப்படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டுவர தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது. Please follow and like us: Loading…

Read More

முக்கிய நாளில் சூர்யாவுடன் மோதும் பிரபல நடிகர் – கடும் போட்டி!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் “NGK”. அரசியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியிலாகவுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்குவரவுள்ளது. அதே வேளையில் சூர்யா கே.வி.ஆனந்துடன் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். திரில்லர் படமாக உருவாகிவரும் இதில் சூர்யா போலீஸாக நடித்துவருகிறார். மலையாள சினிமாவின் பிரபல நடிகர் மோகன் லாலும் இதில் நடித்துள்ளார். இந்நிலையில் காப்பான் படம் வரும் ஆக்ஸ்ட் 15 ல் வெளியாகவுள்ளது. அதே நாளில் தான் பாகுபலி புகழ் பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படமும் வெளியாகவுள்ளதாம். சூர்யாவுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு உண்டு. அதே வேளையில் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான பிரபாஸின் படம் வருவதால் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலும் பாகுபலி பிறகு வெளியாகும் பிரபாஸ் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகும்…

Read More

சூர்யாவின் காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி இது தானா? – அப்போ செம ட்ரீட் தான்!

“மாற்றான்” படத்திற்கு பிறகு சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் த்ரில்லர் படம் “காப்பான்”. மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்து வருகிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். படத்தின் கதைக்களமும் இந்தியாவிற்கு வரும் ஆபத்தை காப்பாற்றும் விதமாக அமைந்துள்ளதால் அந்த தேதி சரியாக இருக்கும் என படக்குழு எண்ணுகிறது. Please follow and like us: Loading…

Read More

காப்பான் படத்தின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா தரப்பு!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா கடைசியாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார். எதிர்பாத்த அளவிற்கு இந்த படம் வெற்றிபெறுவில்லை என்றாலும் லாபத்தை தந்தது, அதை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட சூர்யா, வரும் 14ஆம் தேதி இதன் டீசர் வெளியாகவுள்ளது. மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் “காப்பான்” படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. ஆர்யா, மோகன்லால் போன்ற நட்சத்திரங்கள் நடித்துவரும் இப்படம் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிவருவது. என்.ஜி.கே டீசரை தொடர்ந்து “காப்பான்” டீசர் மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் என செய்திகள் பரவியது. ஆனால் அது பொய்யாம். என்.ஜி.கே படம் ரிலீஸ் ஆகும்வரை “காப்பான்” மற்றும் சூர்யா நடிக்கும் எந்த படத்தின்…

Read More

சூர்யாவுக்கு வில்லனாக மாறிய பிரபல காமெடி நடிகர் – இப்படியொரு கதாபாத்திரமா?

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் “காப்பான்”. மிக பெரிய பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கி பல்வேறு நாடுகளிலும், இந்தியாவிலும் தொடரவுள்ளது. இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்டோர் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். தற்போது இந்த திரைப்படத்தில் நகைச்சுவை நடிகரான மயில்சாமி இணைந்துள்ளார். ஆனால் இவருக்கு இப்படத்தில் நெகடிவ் கதாபாத்திரம், வில்லன்களில் ஒருவராக வரவுள்ளதாக கூறப்படுகிறது. நகைச்சுவையில் மட்டும் இல்லாமல் குணச்சித்திர வேடங்களில் இவர் பாராட்டுகளை வாங்கியவர் என்று குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் 2019 ஆம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Please follow and like us: Loading…

Read More