NGK பற்றி தகவலை வெளியிட்டு சூர்யா ரசிகர்களை புலம்ப வைத்த தயாரிப்பாளர்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் “NGK”. கடந்த தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு ஈடுபட்ட இப்படம் சில காரணங்களால் தள்ளிப்போனது. நீண்ட நாட்களாக இப்படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட்டும் வராத நிலையில் NGK படத்தின் தயாரிப்பாளர் பிரபு டுவிட்டரில் ரசிகர்கள் சந்தோஷப்படும் படி ஒரு அப்டேட் ஒன்றை தந்துள்ளார். ஆனால், அப்டேட் சொல்லிவிட்டு, கொஞ்சம் வருத்தப்படவும் வைத்துள்ளார், இதில் NGK சிங்கிள் செல்வராகவன், யுவன் கூட்டணியில் சிறப்பாக வந்துள்ளது. அதை எப்போது ரிலிஸ் செய்கிறோம் என்று மட்டும் கேட்காதீர்கள் என்று கூறிவிட்டார். இதை கேட்டு ஒரு புறம் ரசிகர்கள் மகிச்சியடைய மறுபுறம் சீக்கிரம் ரிலீஸ் செய்யுங்கள் என்று புலம்பு வருகிறார்கள். Share88Tweet+1Share88 Shares Loading…

Read More

ரசிகர்களை கண்டதும் சூர்யா செய்த செயல் – வைரலாகும் வீடியோ!

அஜித்,விஜய்க்கு அடுத்தபடியாக ரசிகர்களை கொண்ட நடிகர் என்றால் அது சூர்யாவை தான். இவர் நடிப்பில் தற்போது “NGK” படம் உருவாகிவருகிறது. செல்வராகவன் இயக்கம் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவின் கொச்சியில் நடைபெற்றது. அங்கு படப்பிடிப்பில் கலந்துகொண்ட சூர்யாவை பார்க்க அவரது ரசிகர்கள் அங்கு திரண்டுவிட்டனர். இதை பார்த்த சூர்யா கண்டுக்கொள்ளாமல் கேரவனுள் சென்றுவிடுவார் என அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் ரசிகர்களை நோக்கி வந்து அவர்களுடன் பேச ஆரம்பித்தார். தற்போது அங்கு எடுக்கப்பட்ட இதன் வீடியோ தான் வைரலாக பரவி வருகிறது. This Is Why We All Love Him❤ – #Suriya Coming Nearer Fans Even During His Tight Shooting Schedules#NGK Shooting Progressing @ Kochi#NGKFire @Suriya_offl pic.twitter.com/mVdm2LA3cE — Forum Reelz (@Forumreelz) December 10, 2018 Share201Tweet+1Share201 Shares…

Read More

மாஸாக அறிவிப்போடு வெளியான NGK படத்தின் தீம் மியூசிக் !

சூர்யா வரிசையாக நிறைய படங்களில் நடித்து வருகிறார். இதில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படம் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் “NGK” படத்தை தான். படத்திற்கான வேலைகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது ஆனால் ஃபஸ்ட் லுக் போஸ்டரை அடுத்து வேறு எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. அரசியல் படமாக உருவாகிவரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துவருகிறார். இப்படத்தை Dream Warrior Pictures தயாரிக்கிறார்கள். தற்போது SonyMusicSouth வுடன் இணைந்திருப்பதாக அப்டேட் வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பின் பொது “NGK” தீம் மியூசிக்குடன் கூடிய விடியோவை படக்குழு வெளியிட்டுளள்து. இதோ! Happy to associate with @SonyMusicSouth for #NGK. @Suriya_offl @selvaraghavan @thisisysr @Sai_Pallavi92 @Rakulpreet #NGKwithSony #SonyMusicBagsNGK pic.twitter.com/FVbw4yE7d2 — DreamWarriorPictures (@DreamWarriorpic) December 7, 2018 Share464Tweet+1Share464 Shares Loading…

Read More

NGK படத்தில் இந்த காட்சியில் தாறுமாறு செய்திரும் சூர்யா – வெளியான மாஸ் தகவல்!

ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் சூரிய நடித்து வரும் படம் “NGK”. தீபவாளிக்கு ரிலீஸ் ஆகவிருந்த இப்படம் சில காரணங்களால் ஏப்ரல் மாதம் வரை தள்ளிபோகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தில் பாடல்கள் வேலைகள் தற்போது நடந்து வரும் நிலையில் பெரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பயங்கரமான மார்கெட் சண்டைக்காட்சி ஒன்று உள்ளதாம். 50 பேருடன் சூர்யா சண்டை போடும் இந்த காட்சி சில நிமிடங்களிலேயே முடிந்து விடுமாம். அந்த அளவிற்கு காட்சியில் வேகம் இருக்கும் என்று அந்த காட்சியில் நடித்தவர்கள் கூறியுள்ளனர். அது மட்டுமில்லாமல் படத்தில் வாட்டர் சண்டைக்காட்சி ஒன்றும் உள்ளதாம். அதுவும் இதே அளவுக்கு வெறித்தனமாக இருக்குமாம். அதனால் இந்த படம் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்க போகிறது. Share165Tweet+1Share165 Shares Loading…

Read More

வெறுப்பை சம்பாதிக்கும் மீம்ஸ் கலாச்சாரம் – சூர்யா வருத்தம்!

கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு சூர்யா மற்றும் அவரது குடும்பம் சேர்ந்து ரூ 50 லட்சத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொடுத்து உதவியுள்ளார். இந்நிலையில் இன்று இவர் எழுதிய கட்டுரை ஒன்றில், இன்று தமிழகம் முழுவதும் மீம்ஸ் கலாச்சாரம் தலைத்தூக்கியுள்ளது. இது எந்த அளவிற்கு கொடூரமாக செல்கின்றது என்றால், ஒருத்தர் இழப்பை கூட சந்தோஷமாக கலாய்த்து மீம்ஸ் போடும் அளவிற்கு வளர்ந்துள்ளது என்று கூறி சூர்யா வருத்தப்பட்டுள்ளார். குறிப்பாக இந்த மீம்ஸ் பார்த்து தான் இதனை கூறியுள்ளார், “புயலுக்கு கஜான்னு ஆம்பளைப் பேரு வெச்சா இப்படித்தான். குடிகாரன் மாதிரி இங்கே வர்றேன்னு சொல்லிட்டு வேற எங்கேயோ போறது. இதே சுஜான்னு பொம்பளப் பேரு வெச்சிருந்தா ஸ்ட்ரெயிட்டா இந்நேரம் எல்லாருக்கும் சங்கு ஊதி சோலியை முடிச்சிருக்கும். – இப்படி ஒரு வாட்ஸ்அப் பதிவு பலரிடமிருந்து நமக்கு வந்திருக்கும்.…

Read More

கஜா புயல்: சூர்யாவை தொடர்ந்து விஜய் சேதுபதி செய்த நிதியுதவி!

கஜா புயலானது, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களை அடியோடு சாய்த்து புரட்டி போட்டு சென்றுவிட்டது. இதனால் அந்த மாவட்டங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கையை தொலைத்துள்ளார்கள். வீடு, வாசல், தோட்டம், நிலபுலன்கள், உள்ளிட்டவற்றை இழந்து, சாப்பாடு, தண்ணி, கரண்ட் இல்லாமல் இன்னமும் அவஸ்தை பட்டு வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பம் இணைந்து பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு 50 லட்சம் கொடுத்துள்ளார்கள். இவரை தொடர்ந்து விஜய் சேதுபதியின் தனது பங்கிற்கு 25 லட்சம் கொடுத்துள்ளார். இதுகுறித்து விஜய் சேதுபதி தனது அறிக்கையில் ”கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவதுமாக மின்சாரம் கிடைக்க பத்து நாட்கள் ஆகும் என்பதால், அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் ”சார்ஜிங் டார்ச் லைட்” ஆயிரக்கணக்கில் வழங்கப்படும். லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து நாசமாகிவிட்டதால், அதற்கு முன்னுரிமை கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் தோப்புகளை…

Read More

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 லட்சம் நிவாரணம் வழங்கிய சூர்யா குடும்பம்!

கஜா புயலானது, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களை அடியோடு சாய்த்து புரட்டி போட்டு சென்றுவிட்டது. இதனால் அந்த மாவட்டங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கையை தொலைத்துள்ளார்கள். வீடு, வாசல், தோட்டம், நிலபுலன்கள், உள்ளிட்டவற்றை இழந்து, சாப்பாடு, தண்ணி, கரண்ட் இல்லாமல் இன்னமும் அவஸ்தை பட்டு வருகிறார்கள். கஜா புயல் காரணமாக 45 பேர் உயிரிழந்துள்ளார்கள். டெல்டா விவசாயிகள் பயிரிட்ட அனைத்தும் புயலால் முழுமையாக அழிந்துவிட்டது. நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பம் இணைந்து பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு 50 லட்சம் ருபாய் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்கள். சென்னை,கேரளாவில் தாக்கிய புயலின் பொது அணைத்து நடிகர் நடிகைகளும் ஓடி ஓடி பொய் பல லட்ச ரூபாய் உதவினார்கள். ஆனால் அதுவே நம் சொந்த மக்களுக்கு பல நடிகர்கள் வாயை திறக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்று…

Read More

கே.வி.ஆனந்த் படத்தில் சூர்யா,மோகன்லால் கதாபத்திரம் இதுதான் – கசிந்த தகவல்!

சூர்யா, கே.வி.ஆனந்த் மீண்டும் ஒரு படத்திற்காக இணைந்துள்ளார்கள்.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஆர்யா, மோகன்லால், சாயெஷா நடிக்கிறார்கள். ஜில்லா படத்திற்கு பிறகு மோகன்லால் தமிழில் மீண்டும் நடிப்பதால் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் மோகன்லால் பிரதமர் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா அவரின் பாதுகாப்பு அதிகாரியாக வருகிறாராம். இந்த நிலையில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மோகன்லால் பிரதமராக நடிக்கிறார் என்றால், இந்திய அரசியல் தொடர்பான படமாக இருக்குமோ எனக் கேள்வி எழுகிறது. Share51Tweet+1Share51 Shares Loading…

Read More