அஜித்திடம் பல்ப் வாங்கிய பிறகு சமாளிக்கும் தமிழிசை – புதிய பேட்டி!

நேற்று முன்தினம் திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தர்ராஜன் தலைமையில் பா.ஜ.க வில் அஜித் ரசிகர்கள் 100 பேர் இணைந்தார்கள் என்று செய்தி வந்தது. இதை தொடர்ந்து, தமிழிசை சவுந்தர்ராஜன், அஜித்தையும், அஜித் ரசிகர்களையும் நேர்மையானவர்கள் என்று பாராட்டிப் பேசியிருந்தார். இதனால் அஜித்துக்கு பாஜக அழைப்பு என்று தகவல்கள் வெளியாகின. இந்த செய்தியால் கடுப்பான அஜித் உடனடியாக அறிக்கை ஒன்றை விட்டார்.” எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல்‌ ஈடுபாட்டில்‌ எந்த ஆர்வமும்‌ இல்லை. நான்‌ சினிமாவில்‌ தொழில்‌ முறையாக வந்தவன்‌. நான்‌ அரசியல்‌ செய்யவோ, மற்றவர்களுடன்‌ மோதவோ இங்கு வரவில்லை. என்‌ ரசிகர்களுக்கும்‌ அதையேதான்‌ நான்‌ வலியுறுத்திகிறேன்‌. அரசியல்‌ சார்ந்த எந்த ஒரு வெளிப்பாட்டை நான்‌ தெரிவிப்பதில்லை. என்‌ ரசிகர்களும்‌ அவ்வாறே இருக்க வேண்டும்‌ என விரும்புகிறேன்‌” எனக் குறிப்பிட்டிருந்தார். தமிழிசை மற்றும் பா.ஜ.க பெயரை…

Read More