சந்தி சிரித்த பின் சந்திப்பா? – வைரமுத்துவை கிழிக்கும் தமிழிசை!

சின்மயி விவகாரம் தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பூகம்பமாக வெடித்துள்ளது. வைரமுத்து மீது இவர் கொடுத்துள்ள பாலியல் புகாரை தொடர்ந்து இன்னும் நிறைய பிரபலங்கள் தங்கள் பெயர்களை குறிப்பிடாமல் வைரமுத்து மீதும் புகார்களை கூறிவருகிறார்கள்.

இதற்காக ட்விட்டர் தளத்தில் “#MeToo” என்ற ஹாஷ் டாக்கை பயன்படுத்தும் இவர்கள் இந்திய முழுவதும் இந்த பிரச்சனை பூதகரமாகியுள்ளது.

இந்நிலையில் இதில் அமைதி காத்து வந்த வைரமுத்து என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானது; வழக்கு தொடுத்தால் சந்திக்க தயாராக உள்ளேன் என வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

சந்தி சிரித்த பின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர்; நிந்திக்க அவகாசம் கொடுத்து ஒரு வாரம் கழித்து சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன? சந்தக்கவிஞர் மீது சந்தேகமே அதிகரிக்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் ட்வீட் போட்டுள்ளார்.