அதற்குள் தல 59 படம் இவ்வளவு முடிந்துவிட்டதா? – அப்போ இந்த ரிலீஸ் தேதி உறுதி தான்!

அஜித் தற்போது பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்துவருகிறார். ஹிந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் முழுக்க முழுக்க நீமன்றத்தில் தான் நடக்கும்.

சதுரங்கவேட்டை, தீரன் இயக்குனர் வினோத் இயக்கிவரும் இப்படத்தில் டாப்ஸ் ரோலில் ஷரதா ஸ்ரீநாத் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் 35% படப்பிடிப்பு தற்போதே முடிந்துவிட்டதாம், ஹீரோயின்களை வைத்தே இந்த காட்சிகளை எடுத்துவிட்டார்களாம்.

அடுத்த வாரம் படப்பிடிப்பில் அஜித் கலந்துக்கொள்ளவிருக்கின்றார், மேலும் இப்படத்தில் ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளார்கள்.

எப்படியும் படம் மார்ச் மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.இதனால் திட்டமிட்டபடி அஜித்தின் பிறந்தநாளன்று மே 1ஆம் தேதி படம் வெளியாவது உறுதியாகியுள்ளது.

Please follow and like us:
Loading...

Related posts

Leave a Comment