இந்தியன் 2க்கு பிறகு தேவர் மகன் 2 வரும் – அதிரடியாக அறிவித்த உலக நாயகன்!

உலகநாயகன் கமல் ஹாசன் அரசியலில் அதிரடியாக பல விஷ்யங்களை செய்து வருகிறார். அதற்கு இடையே இவர் படங்களில் நடக்கவும் நிறுத்தவில்லை.

விஸ்வரூபம் 2 படம் பெரிய அளவில் கைகொடுக்காத நிலையில் இவர் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் வேலைகள் ஏற்கனவே தொடங்கியுள்ளது. தற்போது அடுத்த படத்திற்கான அறிவிப்பை கமல் ஹாசன் கொடுத்துள்ளார் .

அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தபோது தேவர் மகன் 2 படம் உருவாக இருப்பதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் சொன்ன சில நிமிடங்களில் இந்த செய்தி சமூகவலைதளங்களில் தீயாக பரவியது.

இந்தியன் ,ம் தேவர் மகன் போன்ற வெற்றி படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்கும் கமல் ஹாசன் மீண்டும் தான் விட்ட மார்க்கெட்டை பிடிப்பார் என்று தெரிகிறது.