தென்னிந்தியாவிலே த்ரிஷாக்கு மட்டுமே கிடைத்த பெருமை !

தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை த்ரிஷா. இன்றும் இளமையாக தோன்றும் இவர் சினிமாவிற்கு வந்து 18 வருடங்கள் ஆகியுள்ளது.

இதை வருடங்களில் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். கிட்டத்தட்ட அணைத்து முன்னை ஹீரோக்களுடனும் இவர் ஜோடி சேர்ந்துள்ளார்.

தற்போது ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்ததை அடுத்து தென்னிந்தியாவிலே அதிக ஹீரோக்களுடன் நடித்த நாயகி என்ற பெருமையை பெற்றுள்ளார்.இவர் இதுவரை நடிகர்கள் கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி, விஷால், விஜய் சேதுபதி ஆகியோர் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

மேலும் தெலுங்கில் ஸ்டார் நடிகர்களான மகேஷ்பாபு, பவன் கல்யாண், ஜூனியர் என் டி ஆர், வெங்கடேஷ் என பலருடன் இணைந்து நடித்துள்ளார்

Loading...