5 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் வட சென்னை படைத்த வசூல் சாதனை – முழு விவரம்

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவான “வட சென்னை” படம் ரிலீஸ் ஆனா அணைத்து இடங்களிலும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது.

விடுமுறை நாட்கள் என்பதால் இப்படம் அணைத்து திரையரங்கில் 80% டிக்கெட்கள் விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னையில் இப்படம் ஹவுஸ் புல் காட்சிகளாக செல்கிறது.

வட சென்னை வெளியாகி 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 22 கோடி வரை வசூல் செய்துளளது. இதில் சென்னையில் மட்டும் 3.09 கோடி வசூலாகியுள்ளது.

பிற மாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளை சேர்த்து உலகம் முழுவதும் 5 நாட்களில் வட சென்னை படம் 50 கோடி வசூலை நெருங்கியுள்ளது. தனுஷின் திரைப்பயணத்தில் முதல் வாரத்தில் அதிகம் வசூல் செய்த படமாக இது அமைத்துள்ளது.