வட சென்னை படத்தில் நீக்கப்பட்ட ஜெயலலிதா காட்சிகள் – என்ன தெரியுமா?

வட சென்னை படம் இன்று வெளியாகி செம வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வழக்கம் போல இந்த படமும் நல்ல விமர்சனத்தையே சந்தித்து வருகிறது.

இப்படத்தில் அதிகப்படியானா கேட்ட வார்த்தை இருந்ததால் “A” சான்றிதழ் தான் கிடைத்தது. மேலும் இப்படத்தில் ஜெயலலிதா இடம் பெற்றிருந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது.

அது என்னவென்றால் எம்.ஜி.ஆர் இறந்த பிறகு ஜெயலலிதா அவரின் உடல் அருகிலேயே நிற்கும் வீடியோக்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் அவரை வண்டியில் இருந்து கீழே இறக்கிவிடும் காட்சியும் படத்தில் இருந்ததாம், அதை மட்டும் படத்திலிருந்து நீக்கியுள்ளார்களாம்.

மேலும், படத்தில் எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா தான் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவார், என்று அதற்கு சில காரணங்களை சொல்வது போலவும் காட்சிகள் உள்ளது.