வட சென்னை படத்தில் முதல் நாள் வசூல் கணிப்பு – தனுஷுக்கு இதான் அதிகம்!

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள வடசென்னை படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது.

இப்படத்தின் டீசர், ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் அதிக படுத்தியுள்ளது. இதனால் வடசென்னை படத்தின் முன்பதிவு சென்னையில் மும்மரமாக உள்ளதாம்.

ரோகினி, வெற்றி திரையரங்குகளில் எல்லாம் ஒதுக்கப்பட்ட காட்சிகள் ஹவுஸ்புல் ஆக, ஸ்பெஷல் காட்சிகள் எல்லாம் திரையிடப்படவுள்ளார்களாம்.

எப்படியும் இப்படம் முதல் நாள் ரூ 7 கோடியிலிருந்து 9 கோடி வரை வசூல் வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் இப்படம் தான் தனுஷின் திரைப்பயணத்தில் மிக பெரிய ஓப்பனிங் கிடைத்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.