வட சென்னை படத்தில் முதல் நாள் செம வசூல் -தனுஷுக்கு இதான் அதிகம் !

வட சென்னை படம் இன்று வெளியாகி செம வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வழக்கம் போல இந்த படமும் நல்ல விமர்சனத்தையே சந்தித்து வருகிறது.

மூன்று பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தான் தற்போது வெளியாகியுள்ளது.இதை தனுஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்,ஆண்ட்ரியா,அமீர்,சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

நேற்றே வெளிநாடுகளில் வெளியான இப்படம் அங்கேயும் விமர்சனத்தை தாண்டி வசூலிலும் கலக்கி வருகிறது. அங்கு நேற்று மட்டும் ரூ. 29 லட்சம் வசூலித்துள்ளது. தனுஷ் படத்திற்கு வெளிநாட்டில் இவ்வளவு வசூல் அதிகம் என்று கூறப்படுகிறது.