வட சென்னையில் இந்த காட்சிகள் நீக்கப்படுகிறது -வெற்றிமாறன் திடீர் அறிவிப்பு!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, பவன், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்து வெளியான வட சென்னை படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

படத்தில் அதிகமான கெட்டவார்த்தைகள் மற்றும் சில ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருந்ததால் படத்திற்கு A சான்றிதழ் கிடைத்தது. சில வடசென்னை மக்களோ வெற்றிமாறன் மீது சில காட்சிகளால் மிகவும் கோபித்துக்கொண்டுள்ளனர்.

இதற்கு வெற்றிமாறன் மன்னிப்பு கேட்டுள்ளார், அதோடு படகில் முதலிரவு காட்சி வருவது போல் படத்தில் வருகின்றது.

இதை படத்திலிருந்து நீக்க தற்போது முயற்சிகள் நடந்து வருகின்றதாம், வரும் பாகத்தில் அந்த பகுதி மக்களின் உரிமைக்காக போராடும் வகையில் தான் படம் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.