வட சென்னை படத்தின் ஆறு நாட்கள் வசூல் – மாஸ் காட்டிய தனுஷ்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த வாரம் வெளியான “வட சென்னை” படம் அதிகம் பேசப்படும் படமாக அமைத்துள்ளது.

இயக்குனர் வெற்றிமாறனுக்கு படத்தில் நடித்த அணைத்து நடிகர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஒரு பக்கம் வசூலிலும் இப்படம் அதிகம் லாபம் தந்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என இப்படத்திற்கு வரவேற்பில்லை கிடைத்து வருகிறது. பாக்ஸ் ஆஃபிஸில் 6 வது நாளில் சென்னையில் ரூ 28 லட்சத்தையும், தமிழகத்தில் ரூ 2.50 கோடியையும், உலகம் முழுக்க ரூ 4.05 கோடியையும் வசூல் செய்துள்ளது.

இப்படம் வசூலில் 6 நாட்களின் மொத்த வசூல் படி சென்னையின் ரூ 4.08 கோடியும், தமிழ்நாட்டில் ரூ 35.5 கோடியும் வசூல் செய்துளளது. இது தனுஷ் திரைப்பயணத்தில் அதிகம் என கூறப்படுகிறது.