விஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன் – அடுத்த என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் தரமான இயக்குனர் என்ற பெயரை வாங்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ஹிட் தான்.

இவர்கள் கூட்டணியில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் “வட சென்னை”. மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது.

இப்படத்திற்காக புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெற்றிமாறன் விஜய்க்கு எழுதிய கதை பற்றி பேசியுள்ளார்.

அப்போது “Erich Segal, The Class நாவலை வைத்து ஒரு கதை முதன்முதலாக எழுதினேன், அதை என் நண்பர் படித்து பார்த்துவிட்டு எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களிடம் சொல்ல முடிவெடுத்தோம், அவர் SAC அவர்களிடம் அப்போது உதவி இயக்குனராக இருந்தார்.

முதன்முறையாக கதை என்பதால் விஜய்யிடம் சரியாக கதை சொல்ல வரவில்லை. விஜய்க்காக எழுதிய கதை இல்லை, ஆனால் விஜய் நடித்தால் நன்றாக இருந்திருக்கும். நண்பன் படத்தை போல தான் அந்த கதையும்” என பேசியுள்ளார்.