சர்காருக்கு வழிவிட்டு தீபவாளி ரேஸில் இருந்து விலகிய படங்கள்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளுக்கு மேல் வெளியாவதால் முதல் நாள் வசூல் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளி நாளில் விஜய் ஆன்டனியின் திமிரு பிடிச்சவன், தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா. ஆர்.கே.சுரேஷின் பில்லா பாண்டி படமும் திரைக்கு வர இருந்தன.

தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் விஜய் ஆன்டனியின் திமிரு பிடிச்சவன் படம் வேறொரு தேதிக்கு தள்ளிபோகிறது. அது நவம்பர் 16ம் தேதி வெளிவரும் என கூறப்படுகிறது.

தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா தீபவாளிக்கு ரிலீஸ் செய்வதாக படக்குழுவிடம் இருந்து அறிவிப்பு வந்தது. ஆனால் இன்னும் பிரச்சனை முடியாத நிலையில் அந்த படமும் தீபாவளி ரிலீஸ் ஆகவில்லை. மேலும் புதிய தேதி பற்றி எந்த ஒரு தகவலும் வரவில்லை என்பது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் வருத்ததற்கு ஏற்படுத்தியுள்ளது.