அட்லீ படத்திற்காக களத்தில் இறங்கிய தளபதி விஜய் !

நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. அவரது கரியரில் 62-வது படமான இதனை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். முழுக்க முழுக்க அரசியல் களத்தில் இயக்கப்பட்டிருந்த இந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

இந்நிலையில் விஜய்யின் 63-வது படத்தை இயக்குநர் அட்லீ இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெறி, மெர்சல் ஆகியப் படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இவர்கள் இணைகிறார்கள். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதனை ஏ.ஜி.எஸ். எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மெர்சல், சர்கார் ஆகிய படங்களைத் தொடர்ந்து, விஜய்யின் இந்தப் படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் விஜய் 63 படத்தைப் பற்றி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில், பயிற்றுவிப்பாளராக விஜய் நடிக்கிறாராம். அதற்காக பல ‘பிஸிக்கல் ஃபிட்னெஸ் ட்ரெயினிங்கில்’ தற்போது பங்கெடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

Loading...