தமிழ்,தெலுங்கு படங்களை தொடர்ந்து மலையாள படத்தில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி!

வேகமாக வளர்ந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி வருடத்திற்கு 4 படங்களுக்கு மேல் கொடுத்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் வட்டாரம் உருவாகி அடுத்த இடத்திற்கு சென்றுவிட்டார்.

இந்த வருடம் இவர் நடிப்பில் 5 படங்கள் வெளியாகி அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த 5 படங்களிலுமே வித்யாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது இவரது தனிப்பட்ட சிறப்பு.

அடுத்ததாக இவரது 25வது படமான “சீதக்காதி” படம் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் 70 வயது கிழவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மற்ற மொழி படங்களில் இருந்தும் விஜய் சேதுபதிக்கு வாய்ப்புகள் வருகின்றன. தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்கிறார். இதில் படை தளபதியாக நடிப்பதாக கூறுகின்றனர். மெகா பட்ஜெட்டில் தயாராகி உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் விரைவில் திரைக்கு வருகிறது.

அடுத்து மலையாள படத்துக்கும் ஒப்பந்தமாகி உள்ளார். இதில் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கிறார். சாஜன் கலத்தில் டைரக்டு செய்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கும் கதாநாயகனுக்கு இணையான வேடம் என்று கூறப்படுகிறது.

Loading...