கஜா புயல்: சூர்யாவை தொடர்ந்து விஜய் சேதுபதி செய்த நிதியுதவி!

கஜா புயலானது, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களை அடியோடு சாய்த்து புரட்டி போட்டு சென்றுவிட்டது.

இதனால் அந்த மாவட்டங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கையை தொலைத்துள்ளார்கள். வீடு, வாசல், தோட்டம், நிலபுலன்கள், உள்ளிட்டவற்றை இழந்து, சாப்பாடு, தண்ணி, கரண்ட் இல்லாமல் இன்னமும் அவஸ்தை பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பம் இணைந்து பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு 50 லட்சம் கொடுத்துள்ளார்கள். இவரை தொடர்ந்து விஜய் சேதுபதியின் தனது பங்கிற்கு 25 லட்சம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து விஜய் சேதுபதி தனது அறிக்கையில் ”கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவதுமாக மின்சாரம் கிடைக்க பத்து நாட்கள் ஆகும் என்பதால், அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் ”சார்ஜிங் டார்ச் லைட்” ஆயிரக்கணக்கில் வழங்கப்படும். லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து நாசமாகிவிட்டதால், அதற்கு முன்னுரிமை கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் தோப்புகளை முழுவதுமாக புனரமைத்து தரப்படும். என்று கூறியுள்ளார்.

Loading...