நான்கு முறையை தேசிய விருது வாங்கிய இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி -செம் மாஸ்!

மக்கள் செல்வன் என்று பட்டம் பெற்ற விஜய் சேதுபதிக்கு தனி ரசிகர்கள் வட்டாரமே உருவாகியுள்ளது.இவரது தனித்துவமான தனித்துவமான நடிப்பில் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

வருடத்திற்கு அதிக படங்கள் கொடுக்கும் ஒரே ஹீரோ இவர் தான். இந்த வருடம் இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களும் வெற்றியை பெற்றது. அதுவும் கடைசியாக வந்த “96” படம் தமிழ் சினிமாவின் நீங்காத இடம் பிடிக்கும் படமாக அமைந்துள்ளது.

இவர் நடிப்பில் அடுத்ததாக சீதக்காதி, பேட்ட, சூப்பர் டீலஸ், “சேதுபதி” இயக்குனர் அருண் குமாருடன் ஒரு படம், தெலுங்கில் Sye Raa Narasimha Reddy என வரிசைகட்டி வரும் நிலையில் மேலும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இவர் அடுத்து நான்கு முறை தேசிய விருது வாங்கிய இயக்குனர் சேரனுடன் இணைய இருப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது, ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை.

சேரன் இறுதியாக 2015ம் ஆண்டு ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை இயக்கியிருந்தார்.சேரன் பிறந்தநாளன்று(டிசம்பர் 12) இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்க வந்துள்ளது.

Loading...