பேட்ட படத்தில் மாஸான விஜய் சேதுபதி லுக் வெளியானது – இதோ!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ரஜினிகாந்துடன் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி முதன்முறையாக நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து பேட்ட படத்தில் நடித்துள்ளார். அவர் இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இவரின் போஸ்டர் வெளியாகியுள்ளது .

“ஜீத்து” என்ற காதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி கையில் துப்பாக்கியுடன் முகத்தில் ரத்த காயத்துடன் அந்த போஸ்டரில் தோன்றுகிறார்.இந்த போஸ்டர் இப்படத்தில் இவர் வில்லமாக நடித்துள்ளார் என்று உறுதிப்படுத்தியுள்ளது.

Loading...