தாய்லாந்து பறக்கும் மக்கள் செல்வன் – விஜய் சேதுபதியின் அடுத்த பட அப்டேட் !

விஜய் சேதுபதி Non-stop ஆகா போட்டிக்கொண்டிருக்கிறார். இந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான நான்கு படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது என்று கூறலாம். இவரது கால் ஷீட் வாங்க பல இயக்குனர்கள் வரிசையில் நிக்கிறார்கள்.

அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகிவரும் இவர் நேற்று சீனு ராசாமி இயக்கத்தில் நடிக்கப்போவதாக அறிவித்தார்.அதை தொடர்ந்து வாலு, ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அந்த படம் பிப்ரவரி மாதம் ஷூட்டிங் தொடஙவுள்ளது.

தற்போது விஜய் சேதுபதி “சேதுபதி” பட இயக்குனர் அருண் குமார் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் பகுதிகளில் நடந்து முடிந்தது.

இதை தொடர்ந்த்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் தொடங்கியுள்ளது. 40 நாட்களில் இந்த படத்தை முடிவுள்ளார்களாம். விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட் லுக் வெளியாகும் என தெரிகிறது.

யுவன் ஷங்கர் ராஜ இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார்.

Loading...