மிக பெரிய எதிர்பார்ப்பில் இருந்த விஜய் சேதுபதியின் “சூப்பர் டீலஸ்” படத்தின் செம் அறிவிப்பு – கொண்டாடும் ரசிகர்கள்!

ஆரண்ய காண்டம் என்ற ஒரேய படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்கவைத்த இயக்குனர் தியாகராஜ குமாரராஜா. தனது முதல் படத்தில் நிறைய சர்ச்சைகள் இருந்தாலும் நிறைய விருதுகளை வாங்கிய படம்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் அடுத்ததாக “சூப்பர் டீலஸ்” என்ற படத்தை இயக்கிவருகிறார். இதில் விஜய் சேதுபதி, சமந்தா, பாஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

செக்க சிவந்த வானம், 96 என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்துள்ள விஜய் சேதுபதி அடுத்த படம் இந்த “சூப்பர் டீலஸ்” தான்.

தற்போது இப்படத்தின் செம அறிவிப்பு வந்துள்ளது. அக்டோபர் 8 ஆம் தேதி இப்படத்தில் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் துணிச்சலான கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளாராம்.