ரஜினிக்கு கிடைத்த அதே பெருமை விஜய் சேதுபதி, த்ரிஷாவிற்கு கிடைத்துள்ளது!

விஜய் சேதுபதி,த்ரிஷா நடித்துள்ள “96” படம் அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேரூ கிடைத்துள்ளது. முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் இப்படமா அதிகம் பேசப்படுகிறது.

சமூக தளங்கள், வாட்ஸ் அப் என அனைத்திலும் இப்படத்தின் காட்சிகள் தான் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பள்ளி பருவத்தில் வந்த காதலை மிகவும் அழகாகவும் யதார்த்தமாகவும் காட்டியுள்ளார் இயக்குனர் பிரேம் குமார் .

இந்நிலையில் இப்படத்தின் ரீச் நன்றாக இருந்த காரணத்தால், கபாலி படத்தின் ரிலீசுக்கு பின் எவ்வாறு ரஜினியின் சிறிய சைஸ் பொம்மை ரிலீசானதோ, அதே போல் தற்பொழுது ரிலீஸ் செய்துள்ளனர்.

Loading...