இவ்வளவு பாதிப்பிற்கு பிறகும் தளபதி உம்முன்னும் கம்முன்னும் இருப்பது சரியா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளி அன்று வெளியான “சர்கார்” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் புதிய சாதனைகள் படைத்தது வருகிறது.

ஆனால் இப்படத்தில் வில்லியாக நடித்த வரலட்சுமிக்கு ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்று பெயரை வைத்திருந்தனர்.இது அதிமுக கட்சி இடையே பெரிய கோபத்தை ஏற்படுத்தியது.

மேலும் இலவச பொருட்களை எரிக்கும் காட்சிக்கு ஆளும் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அந்த காட்சிகள் நீக்கப்பட்டது. மேலும் கோமளவல்லி எனும் பெயர் இடங்களிலெல்லாம் ஒலி வராமல், ம்யூட் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஒரு பக்கம் ரசிகர்கள் வைத்த பேனர்களை அதிமுகவினர் கிழித்து போராட்டம் நடத்தியதால் சில காட்சிகள் ரத்து செய்யப்பட்டு தியேட்டர்களுக்கு நஷ்டம் ஆனது.

இன்னொரு பக்கம் அனுமதியின்றி விஜய் ரசிகர்கள் பேனர் வைத்ததாக போலிஸார் கைது நடவடிக்கையில் இருக்க, ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள்.

வேறொரு பக்கம் முருகதாஸ் வீட்டிற்கே சென்று கைது நடவடிக்கையில் போலிஸார் இறங்கினர்.கூடவே இப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் அலறிப்போய் சில காட்சிகளை நீக்கும் நடவடிக்கை எடுத்து.

இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக ரஜினிகாந்த்,கமல் ஹாசன் என முக்கிய புள்ளிகள் குரல் கொடுத்துவரும் நிலையில் இதில் சம்மந்தப்பட்ட விஜய் மட்டும் அமைதியாய் இருப்பது பலரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

படத்தில் ஒரு விரல் புரட்சி செய்யும் இவர் நிஜத்தில் உம்மும்னும் கம்முன்னும் இருப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.