விஸ்வாசம் பாடலில் இந்த ஸ்பெஷல் இருக்கும் – மாஸான தகவலை சொன்ன நடன இயக்குனர்!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள “விஸ்வாசம்” வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. விடுமுறை நாட்களை குறிவைத்து ஜனவரி 10ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

அஜித் இப்படத்தில் துறுதுறுப்பான கிராமத்து இளைஞன் கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் முதல் முறையாக அஜித் மதுரை பாஷை பேசி நடித்துள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதம் தான் இங்கும் நிலையில் டீசர்,பாடல்கள் என எதுவும் வரவில்லை.இதனால் அப்செட்டில் இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு செம அப்டேட் கிடைத்துள்ளது.

விஸ்வாசம் படத்தின் ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக இருந்த பிருந்தா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, அவர் நடிகரே கிடையாது, ஒரு சாதாரண மனிதர்.

எல்லோரிடமும் எப்போதுமே சாதாரணமாக பழகுவார். அஜித் அவர்களின் எண்ட்ரி பார்த்து அசந்துவிட்டேன், எல்லோருக்கும் போய் கை கொடுத்தார். பின் ஒரு நடன காட்சிகள் எடுத்தோம், அதை பார்த்த நாங்கள் எல்லோரும் சிலிர்ந்து போய்விட்டோம். பாடலில் ஒரு சிக்னேசர் ஆக்ஷன் உள்ளது என சின்ன அப்டேட் கொடுத்துள்ளார்.

Loading...