ஆர்வத்துடன் எதிர்பார்த்த விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட் இதோ!

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் “விஸ்வாசம்” படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்துவருகிறது. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

விஸ்வாசம் படம் குறித்து புதிய அப்டேட் இன்று வரும் என்று நேற்று தகவல்கள் வந்த நிலையில் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

தற்போது சத்யஜோதி நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது,இதில் விஸ்வாசம் படத்தின் தமிழக உரிமையை KJR Studios நிறுவனம் வாங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஆனால், செகண்ட் லுக், டீசர் குறித்து வரும் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். இருப்பினும் விரைவில் இப்படத்தின் Motion Poster ஒன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

Loading...