சமூக அக்கறை கொண்ட தல – இரண்டாவது போஸ்டர் பார்த்து கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

தல அஜித் ரசிகர்கள் நேற்று முதல் மிக ஆர்வமாக காத்திருக்கும் விஷயம் ஒன்று தான். விஸ்வாசம் படத்தின் இரண்டாவது போஸ்டர்.

அஜித் நடித்துவரும் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது ஃபஸ்ட் லுக்கை இன்று 10.30 மணியளவில் வெளியிட இருப்பதாக சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்தார்கள்.

அதன்படி அவர்கள் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று வெளியிட்டனர். இதை பார்த்த ரசிகர்கள் மிகவும் குஷியாகிவிட்டார்கள்.

ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி ஒரு ஜாலியான கதாபாத்திரத்தில் நடிப்போன போன்று இந்த போஸ்டரில் தோன்றுகிறார்.ஹெல்மெட் போட்டுகொண்டு புல்லட் வண்டியில் வரும் அஜித் செம மாஸாக இருக்கிறார்.

மற்ற நடிகர்களாக இருந்திருந்தால் மாஸ் லூக்கிற்கு எதிர்பார்த்து அந்த ஹெல்மெட்டை தூக்கிபோட்டிருப்பார்கள். ஆனால் தல சமூக அக்கறையுடன் ஹெல்மெட் போட்டு விருதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள்.

Loading...