விஸ்வாசம் படத்தின் கதை இதுதான் – அப்போ மாஸ் கொண்டாட்டம் தான்!

சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள “விஸ்வாசம்” படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியா நயன்தாரா நடித்துள்ளார்.

மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்க டி.இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் மோஷன் போஸ்ட்டர், புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்திய செம வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதில் முதல் முறையாக தல அஜித் மதுரை பாஷை பேசி நடித்துள்ளார்.

தற்போது இப்படத்தின் கதைக்களம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித் இதில் விவசாயியாக நடித்துள்ளாராம். விவசாயம் எவ்வளவு முக்கியம் என்று கூறும் படமாக இது இருக்குமாம்.

இப்படத்தில் இரண்டாம் பாதியில் சிட்டிக்கு செல்லும் அஜித் அங்கே விவசாயத்தின் முக்கியத்தை பற்றி சிட்டியில் வாழும் மக்களுக்கு கூறும் கதாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

மொத்தத்தில் இப்படம் விவசாயம் எவ்வளவு முக்கியம் என்பதை கூறும் என்கிறார்கள். இதனாலே பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு உறுதியாக இருப்பதாக பேசப்படுகிது. இந்த பொங்கல் ரசிகர்கள்களுக்கு செம கொண்டாட்டம் தான்

Loading...