சென்னையின் வசூல் சாதனை படைத்த பேட்ட – விஸ்வாசம் நிலை இதுதான்!

பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் வசூலில் சாதனை படைத்து வருகின்றது. இரண்டு படங்களுமே பொங்கல் வின்னர் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேட்ட சென்னையில் ரூ 15 கோடி வரை வசூல் செய்து ஆல் டைம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் 4வது இடத்திற்கு வந்துள்ளது. அதேபோல் விஸ்வாசம் ரூ 12 கோடி வசூல் செய்து ஆல் டைம் பாக்ஸ் ஆபிஸில் 7வது இடத்தில் உள்ளது. 2.0, பாகுபலி-2, சர்கார் ஆகிய படங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளது. Suggestions For You இந்த ஆண்டில் வசூலில் சாதனை படத்தை தமிழ் படங்கள் &#… தமிழகத்தில் 50 நாட்களில் பேட்ட, விஸ்வாசம் குவித்த … பேட்டயா? விஸ்வாசமா? – இந்த பிரபல திரையரங்கில… பேட்ட, விஸ்வாசம் படங்கள் குவித்த மொத்த வசூல் என்ன ……

Read More

பாகுபலி 2 படத்திற்கு பிறகு விஸ்வாசம் படைத்த பலே சாதனை!

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த படம் விஸ்வாசம். இப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. ரிலீஸான முதல் நாளிலேயே தமிழகத்தில் ரஜினியின் பேட்ட படத்தை வசூலில் முந்தியது.இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது. விஸ்வாசம் வெளியான முதல் வாரத்திலேயே படத்தின் செலவு மொத்தத் தொகையும் வசூலாகிவிட்டதாக படத்தின் தயாரிப்பாளரும், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர். தற்போது இப்படம் வெளிவந்து 20 நாட்கள் கடந்தும் நேற்று வரை தமிழகத்தின் வசூல் கோடியில் தான் இருந்ததாம். இன்னும் வசூல் லட்சங்களுக்கு கூட குறையவில்லையாம், பாகுபலி-2விற்கு பிறகு இப்படி ஒரு சாதனையை விஸ்வாசம் தான் செய்துள்ளதாம். Suggestions For You விஸ்வாசம் தாக்கம் – சிவாவை நேரில் அழைத்து கத… பாகுபலிக்கு அடுத்த இடத்தில் விஸ்வாசம் – இவரே… அடங்காத விஸ்வாசம் – NO…

Read More

விஜய் சேதுபதி முதல் முறையாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகிவிட்டார். இவருக்கென்று தனி மார்க்கெட், தனி ரசிகர்கள் வட்டாரம் என உருவாகிவிட்டது ஒரு காலத்தில் c, தனுஷ் படத்தில் பின் கலைஞராக நடித்த அவர் இப்போது அவர் தயாரிக்கும் படத்திலே நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். அவரது தனித்துவமான நடிப்பில் அனைவரையும் கவர்ந்துவிட்டார் என்பது தான் காரணம். எப்போதும் இயல்பாக ரசிகர்களுடன் பழகுவது ஒரு தனி விஷயம். இவர் ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்குகிறார் அதில் படிப்பு முடிந்து வேலைக்கும் போய் முதன்முதலாக தான் 3500 ரூபாய் வாங்கியதாக கூறியுள்ளார். Suggestions For You அதிரடியில் இறங்கிய விஜய் சேதுபதி – சிந்துபாத… அஜித், தனுஷை தொடர்ந்து இப்போது விஜய் சேதுபதி !… சினிமா பயணத்தில் விஜய் சேதுபதி முதல் முறையாக எடுக்… தனுஷ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி?…

Read More

வந்தா ராஜாவாதான் வருவேன் திரைவிமர்சனம்

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் லைகா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிப்பில் இன்று (பிப்ரவரி 1) வெளியான படம் வந்தா ராஜாவாதான் வருவேன். சிம்பு நாயகனாக நடித்துள்ள இப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘அத்திரண்டிகி தாரேதி’ என்ற படத்தில் ரீமேக்காக்கும். சிம்புவிற்கு ஜோடியாக மெகா ஆகாஷ் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் கேத்தரின் திரேஷா,நாசர், ரம்யா கிருஷ்ணன், பிரபு, மஹத், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துளளார். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். கதை: வெளிநாட்டில் வாழும் பணக்கார வீட்டு பிள்ளையாக வருகிறார் சிம்பு, இவரது தாத்தா நாசர் காதல் திருமணம் செய்துகொண்ட தனது மகள் ரம்யா கிருஷ்ணனை வீட்டை விடு வெளியே அனுப்புகிறார். இதனால் தன் பேரன் சிம்புவிடம் நீ தான் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க வேண்டும் என்று கட்டளையிட சிம்பு தாத்தா நாசரின் விருப்பத்தை நிறைவேற்ற இந்தியா செல்கிறார்.…

Read More

எத்தனை படங்கள் வந்தாலும் தல படத்தை தூக்க மாட்டோம் – மாஸ் காட்டும் விஸ்வாசம் !

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த “விஸ்வாசம்” படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. இன்று வரை திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்துவரும் இப்படத்தை பிப்ரவரி 14ம் தேதி வரை திரையிட பல திரையரங்க உரிமையாளர் முடிவு செய்துள்ளனர், காரணம் படத்திற்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு தான். குடும்பம் குடும்பமாக இப்படத்தை பார்க்க வருகிறார்கள் என்று நிறைய தியேட்டர் உரிமையாளர்களே கூறிவருகிறார்கள். இன்று சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், ஜி.வி. பிரகாஷ் நடித்திருக்கும் சர்வம் தாளமயம் போன்ற படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆனாலும் அஜித்தின் விஸ்வாசம் தமிழ்நாட்டில் 276 திரையரங்குகளில் ஓடுகிறதாம். Suggestions For You விஸ்வாசம் தாக்கம் – சிவாவை நேரில் அழைத்து கத… பாகுபலிக்கு அடுத்த இடத்தில் விஸ்வாசம் – இவரே… அடங்காத விஸ்வாசம் – NO 1…

Read More

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ரசிகர்கள் விமர்சனம் இதோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் மூலம் ரசிகர்களிடையே மோசமான விமர்சனத்தைப் பெற்ற சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் வந்த செக்க சிவந்த வானம் படத்தின் மூலம் தெளிவு பெற்றார். பல சர்ச்சைகள் ஓய்ந்து இன்று இவரது “வந்தா ராஜாவாதான் வருவேன்” படம் வெளியாகியுள்ளது. சுந்தர் சி. இயக்கியுள்ள இப்படத்தின் மெகா ஆகாஷ், கேத்தரின் திரேசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ட்விட்டரில் இப்படத்தின் விமர்சனம் என்னவென்று பாப்போம், Nothing but Proud 🙏 #STRTheKing arrives with the Blockbuster! 👑🔥 #VanthaRajavathaanVaruven #VRVBlockbuster — Deepu (@DEEPU_S_GIRI) February 1, 2019 #VanthaRajavathaanVaruven My Review pic.twitter.com/r36ypPlalm — Ram Randy (@Cinemapaiyen) February 1, 2019 #VanthaRajavathaanVaruven: “The Simbu we all loved,…

Read More

தனுஷின் அசுரன் படத்தின் நடிக்கும் பிரபல நடிகரின் மகன்!

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் கடைசியாக வெளியான “வட சென்னை” படம் செம ஹிட் அடித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகவுள்ளது. அதற்கு முன்பு இதே கூட்டணி “அசுரன்” என்ற படத்திற்காக இணைந்துள்ளார்கள். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அசுரன் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியாரும் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி பகுதியில் துரிதமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் வந்த போஸ்டர் கூட மிரட்டலாக இருந்தது. இப்படத்தின் தற்போது நடிகர் கருணாஸின் மகன் கென் இணைந்துள்ளாராம். இவர் ஏற்கனவே அழகு குட்டி செல்லம், நெடுஞ்சாலை படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. Suggestions For You அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் இளம் நடிகை ?… தனுஷ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி? உண்மை தகவல… தனுஷ் ரசிகர்களுக்கு இன்று அசுரனனின் ஸ்பெஷல் விருந்… அசுரன் படத்தின்…

Read More

இந்தியன் 2 படத்தில் இல்லாதது ஏன்? ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்!

உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசையில் சர்வம் தாளமயம் படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையே ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பேட்டியில் “இந்தியன் 2” படத்தில் இசையமைக்காதது பற்றி பதிலளித்துள்ளார். ‘தற்போது இல்லை ஷங்கர் அந்நியன், நண்பன் படத்தில் கூட பிரிந்து வேலை பார்த்துள்ளார், இது ஒரு சிறிய கேப் தான், மீண்டும் இணைவோம். கமல் சார் நான் தான் இசையமைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார், ஆனால், ஒரு சில காரணங்களால் முடியவில்லை’ என்று கூறியுள்ளார். Suggestions For You TRP-ல் செம்ம மாஸ் காட்டிய விஜய்யின் பழைய படம், இதன… விருது விழாவிற்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ஸ்ர… அஜித் வார்த்தையை மதிக்காத அவரது ரசிகர்கள் – … காதல் மன்னன் அஜித் போல மாறிய…

Read More