90 ML திரை விமர்சனம்

ஓவியா நடிப்பில் அனிதா உதீப் இயக்கியுள்ள படம் 90 ML . “A” சான்றிதழ் பெற்ற இப்படம் சர்ச்சையுடன் இன்று வெளியாகியுள்ளது. சிம்பு இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கதை:

ஓவியா லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் தனது
காதலருடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு வருகிறார். சீக்ரெட் பிடிப்பது தண்ணி அடிப்பது என சுற்றிவரும் ஓவியாவை பார்த்து பக்கத்தில் இருக்கும் அபார்ட்மெண்ட் பெண்களுக்கு அதிர்ச்சி ஆகிறார்கள்.

அந்த பெண்கள் குடும்பம், கணவர் என வாழ்க்கையை ஓடிக்கொண்டிருக்கின்றனர். நான்கு பெண்கள் ஓவியாவுடன் நெருக்கமாக பழகுகின்றனர்.

அந்த பெண்களுள் ஒருவருக்கு பிறந்தநாள் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்கிறார் ஓவியா. அப்போது குடிக்கும் அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் பற்றி பேசுகின்றனர்.

ஓவியாவின் தோழிகளுக்கு இருக்கும் குடும்ப தைரியமாக ஓவியா தீர்த்து வைக்கிறார் என்பது தான் மீதிகதை.

விமர்சனம்:

குடிப்பழக்கம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என படங்களில் டைட்டில் கார்டில் வரும். ஆனால் இந்த 90 ML பொறுத்தவரை அந்த கார்டு படம் முழுக்க வருகிறது.

நான்கு பெண்கள் ஒன்றாக இருந்தால் எப்படி அந்தரங்கமாக பேசுவார்கள் என்பதை காட்டியுள்ளார் இயக்குனர். ஆனால் குடி, சீக்ரெட், கஞ்சா என இதை சுற்றி பெண்கள் ஓடுவது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது.

லிவ் இன் ரிலேஷன்ஷிப், லெஸ்பியன் காதல், கட்டாய கல்யாணம் இதில் வரும் பிரச்சனைகளை வெளிப்படையாக காட்டியுள்ளார் இயக்குனர்.

ஆனால் எந்த ஒரு குறிகோளும் இல்லாமல் கதை செல்கிறது. ஆண்கள் செய்யும் அனைத்தையும் பெண்கள் செய்யலாம் என்ற ஒற்றை சொல்லை வைத்துக்கொண்டு இப்படம் பொறுப்பில்லாமல் படமெடுப்பது என்பது வருத்தம்.

குடி, சீக்ரெட், கஞ்சா இதையெல்லாம் பெண்கள் செய்தால் நியாயம் என்று காட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். சிம்புவின் இசை திருப்தி என கூறலாம்.

மொத்தத்தில் 90 ML தமிழ் கலாச்சாரத்திற்கு பொருந்தாதது..!!

ரேட்டிங்: 1.75 / 5

Suggestions For You

Loading...

Leave a Comment