ஐரா திரை விமர்சனம்

படம்: ஐரா
நடிகர்கள்: நயன்தாரா, கலையரசன், யோகி பாபு
இயக்குனர்: சர்ஜுன்

கதை:

யமுனா என்ற கதாபத்திரத்தில் வரும் நயன்தாரா மக்கள் மெயில் என்கிற பத்திரிகையில் பணியாற்றி வருகிறார். அவரது வீட்டில் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க, உடனே வீட்டை விட்டு வெளியிருகிறார்.

வீட்டை விட்டு வெளியேறிய பிறகு பொள்ளாச்சியில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு செல்கிறார். அங்கு பேய் இருப்பது போல காட்டி youtubeல் சம்பாதிக்கலாம் என பிளான் போட்டு, ஆவரது பாட்டி மற்றும் யோகி பாபு ஆகியோரது உதவியுடன் மிகவும் பிரபலமும் ஆகிறார். பின்னர் தான் அவருக்கு வருகிறது பெரிய பிரச்சனை. ஒரு நிஜ பேய் அவரை பயமுறுத்துகிறது.

அதே நேரத்தில் நடிகர் கலையரசன், பவானி என்பவரது பேய் தொடர் கொலைகளை செய்து வருவதை பார்க்கிறார். யமுனாவை கொலை செய்ய முயற்சிப்பதும் அதே பேய் தான்.

பிளாஷ்பேக்கில் பவானி என்ற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் நயன்தாரா. பவானி பிறந்தது முதல் சந்தித்த துயரங்கள் கருப்பு வெள்ளையில் திரையில் வருகிறது. அவர் எப்படி இறந்தார், அவர் ஏன் நயன்தாராவை கொல்ல நினைக்க காரணம் என்ன என்பதை எமோஷனலாக காட்டுகிறது மீதி படம்.

விமர்சனம்:

இரண்டு கதாபாத்திரங்களில் வரும் நயன்தாரா நடிப்பில் தனது முத்திரையை பதித்துள்ளார். குறிப்பாக பவானி என்கிற கருப்பான பெண் வேடத்தில் ஆவரது நடிப்பு அல்டிமேட். ஹோட்டலில் சட்டையுடன் பணியாற்றும் கெட்டப் துவங்கி கிளைமாக்ஸில் திருமண கோலத்தில் இருக்கும்போது கதறி அழுவது வரை பல காட்சிகளில் அவரது முகபாவனை மற்றும் நடிப்பு நம் கண்களிலேயே இருக்கும்.

வழக்கமான பேய் கதை என்றாலும் இறுதியில் எமோஷனலாக மாறுகிறது திருப்தி அளித்தது. கருப்பாக இருக்கும் நயன்தாரா ஏன் மற்றொரு நயந்தாராவை பழிவாங்க துடிக்கிறார் என்கிற கேள்வி தான் கிளைமாக்ஸ் வரை த்ரில்லாக வைத்திருந்தது.

பவானி பேய் ஏன் நயன்தாராவை பழிவாங்க துடிக்கிறது என அறிய நமக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கடைசியில் வைத்த சின்ன ட்விஸ்ட் அட என்னய்யா.. என்பது போல ஏமாற்றத்தை தருகிறது.

மொத்தத்தில் ஐரா சில இடங்களில் தடுமாறினாலும் நயன்தாரா காப்பற்றியுள்ளார்.

ரெடிங்: 3.0/5

Suggestions For You

Loading...