பொன்னியின் செல்வன் படத்தின் வில்லியாக மாறிய பிரபல நடிகை!

mani-ratnam

மணிரத்னம் இயக்க இருக்கும் பொன்னியின் செல்வன் படம் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் தொடர்ந்து படம் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் படத்தின் பட்ஜெட் கருதி, அந்நிறுவனம் விலகிவிட்டது. தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தப்படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, விஜய் சேதுபதி, அமலா பால், கீர்த்தி சுரேஷ் என பல நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதோடு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மருமகள் ஐஸ்வர்யாராய் ஆகியோரும் இந்த படத்தில் நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது.

இந்நிலையில், மணிரத்னம் படத்தில் நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக பாலிவுட்டில் முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐஸ்வர்யாராய் ஏற்கும் நந்தினி வேடம், அதிரடியான வில்லி வேடம் ஆகும்

Suggestions For You

Loading...

Leave a Comment