ராசியில்லாத இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த தல அஜித் – அவரே கூறிய தகவல்!

ajith

தல அஜித் தற்போது புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார்.  இவர் கடந்து வந்த பாதைகள் பற்றி பேச ஒரு நாள் போதாது.  தன்னம்பிக்கையின் சிகரமாக திகழும் தல அஜித்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சினிமாவில் தான் முன்னேறும்போது தன்னுடன் சேர்ந்து நிறைய பேரையும் முன்னேற வைத்துள்ளார். பல இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தமிழ் சினிமாவில் அவர்களுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தவர் அஜீத்.

அந்த வரிசையில் இயக்குனர் ரமேஷ் கண்ணாவும் இருக்கிறார். இவர் இயக்கிய முதல் படம் “தொடரும்” அதில் அஜித் தான் ஹீரோ.

ரமேஷ் கண்ணா 10 வருடமாக சினிமாவில் இருந்தும் இயக்குனராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் இயக்குனரான முதல் இரண்டு படங்கள் பாதியில் நின்றுபோனது மேலும் அவருக்கு வருத்தத்தை அளித்தது.

அதன் பிறகு ரமேஷ் கண்ணா அஜித்திடம் “தொடரும்” படத்தின் கதையை கூறியுள்ளார். பலரும் இவரை ராசியில்லாத இயக்குனர் என்று கூற அஜித் பிடிவாதமாக அவருடன் படம் பண்ணுவேன் என்று கூறி வாய்ப்பு கொடுத்துள்ளார்.

இந்த தகவலை ரமேஷ் கண்ணா அவர்களே எங்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...